Tuesday, July 28, 2009

திருடனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

நேரம் 6.00 PM. தொலைபேசி அழைத்து.
"ஹலோ, சொல்லுடா "
"டேய் எங்க இருக்க?"
"ஆபீஸ்ல"
"விஜய் எங்க?"
"ஆபீஸ்ல தான் இருப்பாரு"
"டேய் வீடு திறந்திருக்குடா !?"
"என்னடா சொல்லுற ?! நல்ல செக் பண்ணு"
"டேய் விளையாட்டுக்கு சொல்லல, நிஜமாதான் ! இரு நானே திரும்ப கூப்பிடுறேன் "
தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நேரம் 7.40PM - இடம் - வீடு

காவல் துறை ஆய்வாளர் ஆயி வாலருடன் (நாய்) துப்பறிந்துகொண்டிருப்பாரென்று எண்ணி சென்றால் சில காவல் துறை மக்களுடன் பொது மக்களும் இருந்தனர். எல்லோரும் உங்க பொருளெல்லாம் இருக்கான்னு பார்க்க சொன்னாங்க. மாசக்கடைசியில் என்ன கோடி ரூபாய்க்கு 500 ருபாய் கம்மியாகவா வைத்திருப்போம்? இருந்தது 4 set அழுக்குதுணி மற்றும் பழைய நியூஸ் பேப்பர் மட்டும் தான். வேறென்ன எதிர்பார்க்க முடியும் எங்க ரூமில்? கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் காணாமல் போயிருந்தது. அது எங்க வீட்டுக்கு வாங்கிய பூட்டு. கடைசியில் திருடனுக்கு அதுதான் மிச்சம்.

திருடனை பற்றிய எங்கள் யூகம் சில -

1. தொழிலுக்கு புதுசாக இருக்க வேண்டும் - மாச கடைசியில் திருட வந்ததால்.
2. வேறு ஏரியாவாக இருக்க வேண்டும் - எங்க வீட்டுக்கு ரெண்டு வீடு தாண்டி போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.
3. IT மக்கள்னு தப்பா நினைத்து கைவரிசையை காட்டலாம்னு நினைச்சிருக்கலாம் - நாங்க IT ல தான் இருக்கோம் ஆனா software இல்ல.
4. எங்களை விட ரொம்ப நொந்தவனாக இருக்க வேண்டும் - பூட்டை மட்டும் திருடியதால். ஏன்னா வீட்டுல TV/DVD Player எல்லாம் இருக்கு. அத வெளியில் கொண்டுபோக முடியாது ஏன்னா யாரவது பார்த்தா கேப்பாங்க.

இதில் சில காமெடி காட்சிகள் - பக்கத்து வீட்டு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. போலீஸ் விசாரித்துக்கொண்டிருந்த பொது பக்கத்து வீட்டுக்காரன் போனில் பேசியபடி வீட்டை திறந்துகொண்டு நுழைந்தான் ஆனால் கதவில் பூட்டு இல்லாததை கவனிக்காமல். சொன்ன பிறகே கவனித்தான் ஆனால் பதறவில்லை - நம்ம சாதி போல.

என்றாலும் திருடனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

1 comment:

  1. திருடனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

    இந்த word veryfication --ஐயும் - திருடிக்கொண்டு போகச்சொல்லுங்க Please ....

    ReplyDelete