முள்ளும் மலரும் என்றொரு படத்தில் வரும் இந்த பாடல் இன்றைய தமிழக அரசியலுக்கு முற்றிலும் பொருந்தும். ஈழதமிழர்கலாகட்டும் அண்டை மாநிலமாகட்டும் ஒரே பார்வைதான். ஈழத்தமிழர்களை இலங்கையை சேர்ந்தவர்கள் என்று கூறிவிட்டு தப்பிவிடலாம். ஆனால் இப்போது தமிழகம் மூன்று புறங்களிலும் நசுக்கப்பட்டு வருகிறது. மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான நீர் நமக்கு மூன்று அண்டை மாநிலங்களிலிருந்தும் வருகிறது. ஏன் எனஊருக்கு கூட அண்டை மாநிலமாம் கேரளத்தில் மழை பெய்தால் தான் குடிநீர் கிடைக்கும். இப்போது நமக்கு என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நம் எல்லையில் இருந்தாலும் கர்நாடக அரசின் வயற்றில் புளியைகரைப்பதால் அது எதிர்க்கிறது. பாலாற்றில் அணைகட்ட தடை இருந்தபோதும் நீதிமன்றம் எதிர்த்த போதும் ஆந்திர அரசு தன்வேலையை ஆரம்பித்துவிட்டது. முல்லை பெரியார் அணை பலமாக இருப்பதை மத்தியகுழு உருதிபடுத்தியபோதும் புதிய அணை கட்ட துபாய் கட்டுமான நிறுவனத்திற்கு சர்வே செய்ய அழைத்துள்ளது. மீதம் இருப்பது கடல் மட்டும்தான். அதற்கும் ஆபத்து இலங்கை கடற்படை மூலம். இப்படி பல இடர்கள் இருந்தாலும் நமது முதல்வருக்கு இப்போது தலையாய கடமை என்னவென்றால் "பொன்னர் சங்கர்" படத்தை துவக்கி வைப்பது.
வெறும் அறிக்கை அரசியல் நடத்தும் எதிர்கட்சிகள், உரிமை இருந்தும் மத்திய அரசிடம் கேட்க மறுக்கும் ஆளும் கட்சி! இதை எல்லாம் மீறி நாமும் தமிழரென்று எண்னிக்கொண்டிருபபதைவிட இந்த பாடலை கேட்டு விட்டு கண்,காது மற்றும் அனைத்தையும் மூடிக்கொண்டிருபோம்.
என்ன செய்ய ?!!! புலம்பத்தான் முடியும்!! ஓட்டையும் காசுக்கு வித்தாச்சு!!
Subscribe to:
Post Comments (Atom)
nice post. keep it up
ReplyDelete