Appraisal என்னும் சுய மதிப்பீடு படிவம் ஒன்றை ஒவ்வொரு வருடமும் பூர்த்தி செய்து என் நிறுவனத்திற்கு கொடுப்பது வழக்கம். இந்த வருடம் பொருளாதார மந்தநிலை காரணமாக இது வரை எதுவும் வராமல் இருந்தது. இன்று காலை எனது மனிதவள மேம்பாட்டு மேலாளர் (HR Manager) தொலைபேசி மூலம் அழைத்து எங்களது நிறுவன இணைத்தளத்தில் பூர்த்தி செய்யும்படி கூறினார்.
நானும் விக்கிரமாதித்தன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கி செல்லும்போது அது மீண்டும் மீண்டும் மரத்தில் ஏறும் கதையாக ஒரு பக்கம் பூர்த்தி செய்வதற்குள் ஒன்று இணையத்தொடர்பு அறுந்துவிடும் அல்லது கணினி விழித்துக்கொண்டிருக்கும். இதையும் தாண்டி பூர்த்தி செய்து முடிப்பதற்குள் ஸ்ஸ்அப்பப்பா கண்விழி பிதுங்கிவிட்டது. எதற்காக இந்த விளம்பரம் என்று கவுண்டமணி பாஷையில் கேட்டால் நாமும் ஒரு IT கம்பெனி என்று field ல form ஆகிட்டோம்?! அதான் என்றார்கள்.
நீங்க கொடுக்கபோற 200 அல்லது 300 ரூபா காசுக்கு இந்த விளம்பரம் தேவையா?!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment